Saturday, September 7, 2013

ஐஓஏ சட்டத் திருத்தம் செய்ய இறுதி நாள் அக்டோபர் 31



இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) சட்டத்தில் திருத்தம் செய்து, குற்றம் சாட்டப்பட்ட நபர்களை அக்டோபர் 31-ம் தேதிக்குள் பதவி நீக்கம் செய்ய வேண்டும். பின்னர், டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஐஓஏ தேர்தலை நடத்த வேண்டும் என்று சர்வதேச ஒலிம்பிக் சங்கம் (ஐஓசி) தெரிவித்துள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் குடும்பத்தில் ஐஓஏ மீண்டும் இணைய, குறிப்பிட்ட தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று ஐஓசி எச்சரித்துள்ளது.

லலித்மோடி மீது 8 புகார்கள் நிரூபணம்

பல்வேறு நிதிமுறைகேடுகளில் சிக்கிய ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித்மோடி மீதான புகார் குறித்து ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி உறுப்பினர்கள் விசாரணை நடத்தி 134 பக்க அறிக்கையை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தாக்கல் செய்துள்ளனர். 

அதில், இண்டர்நெட் உரிமம் வழங்கியதில் முறைகேடு, கொச்சி அணியின் பங்குதாரர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் குறித்த தகவலை பேஸ்புக்கில் கசிய விட்டது, இங்கிலாந்து கிளப்புடன் இணைந்து ஐ.பி.எல்.போட்டிக்கு எதிராக ஒரு லீக் போட்டியை நடத்த முயற்சித்தது, 

ஐ.பி.எல். அணிகளில் பினாமி பெயரில் பங்குகள் வைத்து இருந்தது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கான டெண்டர் விஷயத்தில் சலுகை காட்டியது உள்பட 8 புகார்களில் லலித்மோடி மீதான குற்றச்சாட்டு நிரூபணமாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

அறிக்கை மீது வருகிற 25-ந்தேதி இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு எடுக்க உள்ளது. அவருக்கு ஆயுட் கால தடை விதிக்கப்படும் என்று தெரிகிறது.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய அணி அறிவிப்பு


ஹங்கேரியில் நடைபெறவுள்ள உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் 22 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சுஷீல் குமார், அணியில் இடம் பிடித்துள்ளார்.
ஆனால், அவர் காயத்தால் அவதிப்ப

அமெரிக்க ஓபன்: சானியா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபன்: சானியா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், இந்தியாவின் சானியா மிர்சா-சீனாவின் ஜீ செங் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.

மகளிர் இரட்டையர் காலிறுதி ஆட்டத்தில் 10-ம் தரநிலையில் இருக்கும் சானியா-சீ செங் ஜோடி, நடப்பு விம்பிள்டன் சாம்பியனான சு வெய்(தைபே)-பெங் சுவாய் (சீனா) ஜோடியை எதிர்கொண்டது.

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட இலங்கை விருப்பம்

பாகிஸ்தானில் கடந்த 2009-ம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 6 வீரர்கள் காயம் அடைந்தனர். அப்போது நடந்த மோதலில் 6 போலீஸ்காரர்கள் மற்றும் பொதுமக்கள் இரண்டு பேர் பலியாகினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இலங்கை அரசு கிரிக்கெட் அணியை அனுப்புவதை நிறுத்தியது.

நடப்புச் சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்த பயஸ் ஜோடி!



 அமெரிக்க ஓபனில் ஆடவர் ஒற்றையர் காலிறுதி மற்றும் இரட்டையர் அரையிறுதி ஆட்டங்களில் நடப்புச் சாம்பியன்கள் வெளியேற்றப்பட்டனர்.
இரட்டையர் பிரிவில் இந்த ஆண்டின் நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்று 1951-ம் ஆண்டு நிகழ்ந்த சாதனையை சமன் செய்துவிடலாம் என்று எண்ணியிருந்த அமெரிக்காவின் பாப் பிரையன், மைக் பிரையன் சகோதரர்களின் கனவை தகர்த்தது பயஸ் ஜோடி.
நியூயார்க்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவர் இரட்டையர் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக் குடியரசின் ரடேக் ஸ்டீபானெக் ஜோடி 3-6, 6-3, 6-4 என்ற செட்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் செரீனா – அசரென்கா



கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்தது.
உலகின் முதல் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) – அரை இறுதியில் 5–ம் நிலை வீராங்கனையான லீ நாவை எதிர்கொண்டார். இதில் செரீனா வில்லியம்ஸ் 6–0, 6–3 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். அவர் 6–வது முறையாக இறு